Take it easy…Life is Crazy
It’s his 2nd death anniversary 10/06/21
என்னோட பல கவிதைகளில் Crazy மோகன் அண்ணாவின் தாக்கம் இருக்கும்.
2013/2014ல் தான் எனக்கு நேருக்கு நேர் பரிச்சயம். சிங்கப்பூருக்கு சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திற்கு வந்திருந்த போது, என் 3 வயது மகள் அவரிடம் ” க்ருஷ்ணாக்கு ஏன் மீசை இருக்கு,”ன்னு கேட்டப்போ, உங்கப்பாக்கு மீசை இருக்கா, அது மாதிரி க்ருஷ்ணாக்கும் மீசை இருக்குன்னு சொல்லி, ” அகம் ப்ரம்ஹாஸ்மி” என்ற “நான் கடவுள்” எனும் மிகப் பெரிய தத்துவத்தை அவளுக்குப் புரிவுது போல் எளிதாய்ச் சொன்னார்.
ஒரு திரைப்பட காமெடி வசனகர்த்தாவாக, நாடக நடிகராக மட்டுமே அவரை அறிந்த எனக்கு அவருடைய இலக்கிய முகம் பரிச்சயமானது, 3-4/வருஷமாய்தான் தெரியும்..
காப்பியைப் பற்றி நான் எழுதிய வெண்பாவை படிச்சுட்டு, ஒரு நாள் காலைல கூப்பிட்டார் சிங்கப்பூர்க்கு…
” நதிநேசா, இப்படித்தான் கூப்பிடுவார் வாய் நிறைய…நதிநேசா தினம் காப்பி வெண்பால் தான் குடிப்பியா”ன்னு கேட்டார்…!!
அவருடைய அந்த egoless approach..அது unmatchable …
சென்னை வரும்போதெல்லாம் கூப்பிடுவேன்..வீட்டுக்கு வாப்பான்னு கூப்பிடுவார்..
கடைசியா 2019 Aprilல 2 நாள் சென்னை வந்தப்போ அவர் ட்ராமா பாத்துட்டு கிளம்பும்போது ஒரே கூட்டம்..நான் வந்துருக்கேன்னு தெரிஞ்சு ” நதி நேசா’ன்னு 4-5/தடவை கூப்பிட்டார்…நான் அப்போ அவரைப் பார்க்க முடியல…கேட்கத் தான் முடிஞ்சது….
இன்னிக்கு இருந்தா கொரோனாவ காமெடியிலெயே குறைச்சிருப்பார்…
Mohan.அண்ணா you still live inside me, in all my poems, verses snd every walk of life, as your spirit drives me. Your humility, humour and hunger for knowledge…matchless அண்ணா
மனிதன் மறையலாம், மனிதம் மறையாதென்பதற்கு..மோகன் அண்ணா ஒரு உதாரணம்…அண்ணா, you live on..!
நோயெல்லாம் தீர்ந்திடும் நோவெலாம் நொந்திடும்
வாயுஞ் சிரித்து வணங்கிடும்- காயமும்
தேடிடுங் காமெடித் தென்றல் கிரேஸியை
நாடிடச் சேரும் நலம்
நதிநேசன் கணேஷ்