IPL 21 – வெண் பா‘ல் கிரிக்கெட்
Match 31 KKR vs RCB
KKR won MoM: Varun Chakravarthy

கோலிக்கு இன்னுமேன் கோல்?

சுருட்டினான் வீச்சில் சுழற்சக் ரவர்த்தி
வருணனும் பொழிந்தான் வரமாய்- தரமாய்,
அசலான வீச்சினில் அசத்திய வீரன்,
ரசலாடு மாட்டம் ரசம்

கில்லுடன் வெங்கடேசன் கில்லியாய் வென்றனன்
அல்லலில் பெங்களூர் ஆடுது- வல்லிய
வாலியின் வீழ்ச்சியில் வானரம் வாடாது,
கோலிக்கு இன்னுமேன் கோல்?

நதிநேசன் கணேஷ்
#IPL2021