IPL 21- 20 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:20 DC vs SRH SRH won
MoM: Prithvi Shaw
Won through super over
பிருத்வியின் மட்டை பிளந்திட, ஓட்டம்
பெருத்தது தில்லிநற் பேறு- அருமையாய்,
சட்டெனப் பந்த்தும் சரியாய்ச் சுமித்தனும்
எட்டிய ரன்வீத மேற்பு
பேர்ஸ்டோவும் கேனும் பிரமாத மாயாட
வேர்விட்ட திங்கவர் வேட்கைகள்-சீர்பட,
அற்புத அக்ஸரும் ஆவேசக் கானவனும்
நற்கதி ஈந்தார் நயந்து
சமநிலை ஓட்டம் சரியான போட்டி
அமளி துமளியாய் ஆட்டம்- தமதாறில்
ஏழேயெ டுத்து எழாதிங்கு, எஸ்ஸார்ஹெச்
கீழேவி ழுந்தது கேள்!
நதிநேசன் கணேஷ்
#IPL2021