IPL 21- 28 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:28 RR vs SRH: RR won
MoM: Jos Butler
உதித்தது சூரியன் உள்ளூரில், இங்கோ,
துடித்தது சன்ரைஸர் தோற்று- அடித்தனன்,
மட்டைபடு தூரத்தே மாட்டிய பந்துகளைப்
பட்லரும் பார்த்தான் ‘பதம்’
கேன்வந்த பின்னும் கெலித்திட வில்லையே
வேனிற்கா லத்தால் வியர்க்குதோ- ஏனோப்,
பதிலேது மில்லாப் பரிதவிப்பில் வாடும்
கதிரெழுங் கூட்டத்தைக் காண்
நதிநேசன் கணேஷ்
#IPL2021