IPL 21- 22 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:22: DC vs RCB: RCB Won
MoM: De Villiers
வில்’லியர்ஸ் ஆடிய வேட்டையில் மாட்டியே
தில்லியும் தோற்றுத் திணறுது- வல்லிய,
ஹெட்மேய ருக்காட்டம் கிட்டாது போனதால்,
கெட்டதோ, பந்த்தினைக் கேள்!
‘ஈசாலே’க் கோப்பையை ஈட்டிடும் வேட்கையும்
ஆசானாம் கோலி அடைந்தனன்- கூசும்,
பருவத் தலைமைப் பனங்காயை ‘ரிஷபக்’
குருவி சுமக்குமோ கூறு
நதிநேசன் கணேஷ்
#IPL2021