IPL 21- 14 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:14: PBKS vs SRH: SRH won
MoM: Bairstow

பேர்சொல்லும் பிள்ளையாய் பேர்ஸ்டோ விளையாட
வேர்விட்ட திங்கு விளைநிலம்- தேரோட்ட,
வீதியதில் சீராடி வெல்லப் பொறுத்தாடும்
பீதியிலா சன்ரைசர் பீடு

பஞ்சாப் தவிக்குது பாதை தவறியே
நெஞ்சினி லேக்கம் நெருடுது- மிஞ்சிடும்,
ராகுலும் மாயாங்க்கும் ரன்னெடுக் காவிடில்
நோகுதே பஞ்சாப் நொடிந்து

நதிநேசன் கணேஷ்
#IPL2021