IPL 21- 13 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:13: MI vs DC: DC won
MoM: Amit Mishra
சுழல்பந்து வீச்சில் சுருண்டனர் மும்பை
அழலம்பு வீசும் அமித்தால்- அழகுத்
தமிழுக் கரங்குத் தரணி முழுதும்,
“அமித்”திற்குத் தில்லி அரங்கு!
தவனின் திறமும் தளராச் சுமித்தும்
கவனமாய் ஆடக் களிப்பு- நவமாய்
அடித்தாடும் வேந்தர் அதிரடி காணேன்,
முடியுதோ மும்பை முறுக்கு?
நதிநேசன் கணேஷ்
#IPL2021