IPL 21- 12: வெண்பா’ல் கிரிக்கெட்
Match:12: CSK vs RR: CSK Won
MoM: Moeen Ali

போயின துன்பங்கள் பொங்கும் ‘மஹி’ழ்ச்சியில்,
மோயின் ‘வலிமை’யாய் மோதிட- நோயின்றி
மீண்டெழு சென்னையே மேலெழு வோரிடம்
வேண்டுவோம் இன்னமும் வீறு

அனைவரு மிங்கே அமைதி பொழிய
நனையுது அன்பு’டென்'(Anbu’Den’) நட்பில் – நினைவில்,
வருவதை எண்ணி வழித்தடம் போட்டுத்
தருபவன் எங்கள் ‘தலை’

நதிநேசன் கணேஷ்
#IPL2021
#hashtaghappiness