IPL 21- 11 : வெண்பா’ல் கிரிக்கெட்
Match:11: DC vs PBKS: DC Won
MoM: Shikhar Dawan
ஷிகாரவன் தொட்டான் சிகரம் இனியும்
புகார் கொடுப்பது போதும்-தகாத,
வீச்சாலே பஞ்சாபும் வீழ்ந்தது, தில்லிக்கு
மூச்செங்கும் முட்டும் முனைப்பு
ஞானமழை பெய்திடும் ஞாலத்தின் நீலவிரி
வானமது போலத்தான் வான்கடே(Wankade)- தானாய்,
மயிலாட மானாட மட்டை மகிழ்ந்தாட
பயில்விக்கும் பேட்டையிது பார்
நதிநேசன் கணேஷ்
#IPL2021
#hashtaghappiness