IPL 21- 7 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:7 RR vs DC: RR won
MoM: Jayadev Unadkut
மில்லர டித்தாலும் மீளாது தோற்றதால்
தில்லியும் போகும் திடுக்கிட்டு – வெல்ல,
உனதுகட்டுப் பாட்டால் ‘உனத்கட்டாய்’ மாறு,
மனதிற்கு முண்டோ மடை
வல்லவ னுக்கிங்கு வல்லவன் உண்டெனில்
வெல்வது அன்றைய வேட்கையே- சில்லென,
ஆஜராகும் அணியின் அடித்தள மாட்டுதல்
ராஜஸ்தான் ராயல் ரகம்
நதிநேசன் கணேஷ்
#IPL2021