IPL 21- 6 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:5 RCB vs SRH
MoM: Glen Maxwell
கோடிகள் குவித்த குலமகன் மேக்ஸ்வெல்லும்
நாடியே தந்தனன் நல்லாட்டம்- ஆடிய,
வார்னரின் வீரர் வழுக்கி விழுந்திடப்
பாரெழாச் ‘சூரியர்’ பார்!
தடகளப் போட்டியில் தளர்ந்திடல் நன்றோ?
இடத்தை இழப்ப திழுக்கு – கடமையைத்
தங்களுள் சன்ரைசர் தாங்காத தாலிங்குப்
பெங்களூர் பெற்றது பேறு
நதிநேசன் கணேஷ்
#IPL2021