IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்
Match:4 PBKS vs RR
PBKS won by 4 runs
MoM: Sanju Samson
ஹூடாவும் ராகுலும் கூடி நொறுக்கினர்
பாடாய்ப் படுத்தினர் பஞ்சாபும் – வாடாது,
சஞ்சுவும் போராடிச் சஞ்சலம் பெற்றாலும்
நெஞ்சிலே நின்றான் நிமிர்ந்து
ஓர்கிளை வீழ்ந்தால் ஒடியாது மாமரம்
வேர்கொண்டு மீண்டும் வெளிவரும்- சீராக,
ஆர்ஆர் இளைஞரும் ஆடிடும் ஆட்டத்தை
வாயார வாழ்த்திட வா!
நதிநேசன் கணேஷ்
#IPL2021