IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்
MI vs RCB: RCB Won
MoM: Harshal Patel
சாதனை வீச்சாளன் சாதுர்ய ஹர்ஷலும்
மோதினன் தீரமாய் மும்பையை- சோதிக்கும்,
துல்லிய வீச்சிடம் தோற்காமல் போராடி
வில்லியர்ஸ் சேர்த்தனன் வீடு
முதலிலே தோற்பர் முடிவிலே வெல்வர்
அதனா லடையாதீர் ஐயம்- மிதமாய்
விழுந்து எழுபவர் வீழ்ந்திடா ரென்றும்!
இழந்திடார் எம்.ஐ இயல்பு
நதிநேசன் கணேஷ்
#IPL2021