
IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்
வண்ணக் கனவினை வாழ்வென மாற்றிடும்
கண்ணுக் கினியக் களிதரும் – எண்ணமும்,
மங்கும் இரவில் மயக்கிடும் மட்டையே
தங்கிடும் ஐபியெல் தா!
மும்பையின் வெற்றி முடிவுக்கு வாராதோ
தெம்புடை வீரர் தெரிவரோ- நம்பிக்கை
தம்மிடம் கொண்டவர் தளரா துழைப்பவர்,
எம்மையை வெல்பவர் ஏது?
நதிநேசன்
#IPL2021