IPL 21 – பெண்பா‘ல் கிரிக்கெட்
30 CSK vs MI
CSK won: MoM Rituraj Gaekwad
எம்.ஐப் பெருமைகள் எத்தனை கொண்டாலும்
மும்பையும் தோற்றது மோதலில்- வெம்மைத்,
துபாயில் அசலாய்த் துவங்கும் அணியே,
அபாரமுன் ஆட்டம் அசத்து
வித்தென இட்டது வேரெனத் தாங்குது
ரித்துராஜ் மட்டையின் ரீங்காரம்! – இத்திறம்
யாங்கிவன் கொண்டனன் என்றே வியந்தது,
ஓங்குனல் சீயெஸ்கே ஊர்
நதிநேசன் கணேஷ்
#IPL2021