IPL 21- 26 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:26 RCB vs PBKS: PBKS won
MoM: Harpreet Brar
புதியவன் ஹர்ப்ரீத் புகட்டிய பாடம்
அதிர்ந்தது ஆர்சீபி யாட்டம் – நதியெனத்
தன்னிடம் நம்பிக்கை தாராளங் கொண்டதால்
முன்னேறும் பஞ்சாப் முயன்று
ராகுகா லங்களை ராகுலும் வென்றனன்
ஆகுமென் றேயவன் ஆடினன்- தேகம்,
வெயிலடித் தால்நிழல் வெப்பமும் தாங்கும்
கெயிலடி தாங்குமோ கேள்!
நதிநேசன் கணேஷ்
#IPL2021