IPL 21- 25 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:25 DC vs KKR: DC won
MoM: Prithvi Shah

கில்லாடி மார்கனும் கில்கார்த்திக் ரஸ்ஸலும்
தில்லான ஆட்டத்தைத் தேடுவர்- நில்லாத
ராக்கெட்டின் பாதையில் ராட்டினம் ஓட்டுதே
ஆக்கமில் லாக்கொல்கத் தா!

சாகுது கேக்கேயார் ‘ஷா’வடி தாங்காது
நோகுது நம்பிக்கை நொண்டிட- ஏகுது,
தேசுடன் பேசிடும் டீசியின் ஆட்டத்தில்
வீசுதே நம்பிக்கை வீறு

நதிநேசன் கணேஷ்
#IPL2021