IPL 21- 24 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:24 MI vs RR : MI won
MoM: De Kock
நூற்றெழுப தைத்தொட நொண்டிய ராஜஸ்தான்
தோற்றெழா திங்குத் துவண்டனர்- ஆற்றிடும்,
பாத்திரத் தையின்றுப் பத்திர மாயாாடிக்
காத்திடும் டீகாக் கரம்
வேறார் உளரென விம்மிடும் ஆராரே
தேறாது ஆடித் திரியாதீர் – மாறாய்ச்,
செம்மை புகுத்திச் சிறந்திடும் நல்லணி
எம்.மையைப் போலிங்கு ஏறு
நதிநேசன் கணேஷ்
#IPL2021