IPL 21- 23 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:23 CSK vs SRH CSK won
MoM: Rituraj Gaikwad
கதிரெழ வில்லையே காரணம் என்ன
அதிரடித் தோல்வி அதட்டும் – புதிராய்,
நிகரிலா வார்னர் நிலைதடு மாறப்
பகலிலும் ‘ஸன்’படும் பாடு
ராசித்துக் கான்மட்டும் ராகமாய் வீசியே
வாசித்தால் பெறுவரோ வாகையும்- யோசிக்க,
ஏனிங்கு கேப்டனாய் கேனில்லை என்றவர்
நானிலம் வாடும் நலிந்து
கிழங்கட்டை வீரர் இளங்கன்றா யாக,
இழந்த பெருமைகள் மீளும்- உழன்று,
களைகளை நீக்கிக் களத்தில் களிக்கும்
இளைஞ ரிவர்க்கேது ஈடு
மெய்யுற்ற ஃபாஃபும் மெருகேறும் கெய்க்வாடும்
பெய்கிறார் ரன்கள் பொலிவுடன்- உய்வுறு,
ஞானியாய் வந்திங்கு ஞாயிறாய்த் தோன்றிடும்
தோனியே வெல்க தொடர்ந்து
நதிநேசன்
#IPL2021