IPL 21- Match 21 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:21: KKR vs PBKS
MoM: Eoin Morgan
அஞ்சிடும் ராகுலுக் காறுதல் ரன்களே
மிஞ்சிய நாட்களில் மீள்கவே- விஞ்சிடும்,
நெஞ்சின் சுமைகளால் நீளுமித் தோல்வியால்
பஞ்சாகும் பஞ்சாபைப் பார்
சரிபாதி ரன்களைச் சத்தமின்றித் தந்தார்
திரிபாதி மார்கன் திளைத்து- விரியும்,
தடந்தோளின் வீச்சில் திருப்பும் விரலில்
கடந்தது கொல்கத்தா கோடு
நதிநேசன் கணேஷ்
#IPL2021