IPL 21- 19 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:19 CSK vs RCB: CSK won
MoM: Ravi Jadeja

ஆறுகள் பாயுதே ஆகாய மார்க்கமாய்
ஏறுதே சென்னையும் ஏணியில்-வீறுடன்
மாறுதல் காட்டி மலைத்திட வைத்தபின்
சாறுபி ழிந்தவன் சார்( Sir Jadeja!)

அடேயென்ன ஆட்டம் அருங்கலைக் கூட்டம்
ஜடேஜாவும் காட்டினான் ஜாலம்- விடேனென
அந்தியில் ஆடிய அற்புதக் களியால்
முந்திடும் சென்னை முகம்

படிக்கல் பறந்ததால் பள்ளத்தில் வீழ
அடித்தாடும் ஆர்சிபி வாடும்- முடித்தனர்,
எந்தை ஜடேஜாவும் தந்தையன் தாகீரும்
விந்தைச் சுழலை விரித்து

அளவான கெய்க்வாட் அடித்தாடும் ஃபாஃபும்,
வளமாய்த் துவங்கிட வாகை- களத்தினில்
மாங்காய்க் குறியெறி மஞ்சள் குழுவினர்
தாங்குவார் என்றும் தரம்

நதிநேசன் கணேஷ்
#IPL2021