IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்
CSK vs DC
DC won
நரைபடர் சிங்கங்கள் நாணுதே, தில்லித்
துரைகள் புலியாய்த் துரத்த- நுரையாய்,
அடித்திட்ட ஷாவால் அரிமாக்கள் எல்லாம்
பொடியாய்ப் போனதிப் போ
பழையபஞ் சாங்கம் பயனளிக் காது
பிழைக்கப் பிறந்ததா பிடரி? விழைக!
‘தலை’வலி நீக்கத் தரங்கூடு மென்றால்
நிலையினை மாற்று நிமிர்ந்து
நதிநேசன் கணேஷ்
#IPL2021