IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்
Match 3 KKR vs SRH KKR won!
MoM: Nitish Rana

ரன்மழை பெய்தது ரானாவின் மட்டையால்
முன்னதாய்க் கொல்கத்தா முந்துது- என்னதான்
ராசித் அணியினர் ராட்டினமாய்ச் சுற்றியும்
தூசியாய்ப் போனார் தொடர்ந்து

வங்காள வீரணி வாகையுஞ் சூடுமோ
தங்கத்தை இம்முறை தட்டுமோ- பங்கமிலா,
ஆக்கமிகு வீரர் அணிசேர்த்தக் கொல்கத்தாக்
கேக்கேயா ருக்கில்லை கேடு

நதிநேசன் கணேஷ்
#IPL2021