IPL-8 வெண்பா’ல் கிரிக்கெட்
CSK vs PBKS: CSK won
MoM: Deepak Chahar

திடுக்கிட வீசினன் தீப்பொறி தீபக்
ஒடுங்குது பஞ்சாபின் ஒட்டமும்- தொடரும்,
ஜடேஜா களப்பணி ஜாலத்தைக் கண்டு
அடேங்கப்பா வென்னும் அரங்கு

சட்டென ஷாருக் சரிவினைத் தாங்கினான்
திட்டமுடன் ஆடிய தீந்தமிழன்- விட்டுப்
பிடிக்காத பஞ்சாபும் பீதியி லாழ்ந்து
முடித்தனர் நூறில் முயன்று

மோயினலி மட்டையில் மோளவொலி கேட்டிட
ஆயினர் சீயெஸ்கே ஆனந்தமாய்- தேயாது,
மஞ்சள் முகங்களில் மங்களம் இனியென்றும்
நெஞ்சே எழுக நிமிர்ந்து

தோனி இருநூறு தோற்றப் பெருமாட்டம்
வானில் விண்மீன்கள் வாழ்த்திடும் – நானிலச்
சிங்கங்கள் மீண்டுமினிச் சீறிடும் பாருங்கள்
தங்கத்திற் கினியார் தடுப்பு

நதிநேசன் கணேஷ்
#IPL2021