IPL 21- 9 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:9 MI vs SRH: MI won
MoM: Keiron Pollard
செப்பிடும் உன்திறம், சேப்பாக்க மைதானம்
தப்பினைக் காட்டித் தரமிடும்- அப்பால்,
உறுகளி பேணும், உளியாய்ச் செதுக்கும்
பொறுத்தாள் களத்தைப் புரிந்து
பொல்லாத சேப்பாக்கைப் பொல்லார்ட் புரிந்திடச்
சொல்லியடித் தானிறுதிச் சுற்றினில்- நில்லாத,
வார்னரும் பேர்ஸ்டோவும் வாடினர், பின்வந்தோர்
யார்நின்று மாடாத தால்!
ஏனின்று இல்லையென ஏங்கிட வைத்திட்டான்
கேனென்று (Kane) ஆடக் கிடைப்பானோ-தானிங்கு
புள்ளிபெறாப் பாட்டின் புழுக்கம் தவிர்த்தாடி
முள்ளைக் கடக்க முயல்
நதிநேசன் கணேஷ்
#IPL2021