IPL 21- 10: வெண்பா’ல் கிரிக்கெட்
Match:10 RCB vs KKR: RCB won
MoM: De Villiers
சொல்லி யடிப்பதில் சூரனாம் பெங்களூர்
வில்லியர்ஸ் காட்டினான் வித்தைகள்- மில்லியன்,
மாக்ஸ்வெல்லின் மட்டை மழையாய்ப் பொழியுமப்
பாக்கியம் பெற்றனர் பார்
சாகல் பெருஞ்சுழல், ஜாமிசன் சீர்வீச்சு
ஆகவே வென்றனர் ஆர்சீபி- வேகத்தால்,
எட்டும் இலக்கு எளிதாய்க் கிட்டுமோ
திட்டமிட்டுத் தீர்வதனைத் தேடு
நதிநேசன் கணேஷ்
#IPL2021