வெண்பா’ல் கிரிக்கெட்
Match:15: CSK vs KKR : CSK won
MoM: Faf Du Plessis
பெய்யாது போகுமோ பொன்னீரும், நம்பினால்
கெய்க்வாடின் ரன்’னீரும் கிட்டுமோ!- மெய்யெனக்,
கோப்பை தெரியுதுக் கூப்பிடு தூரத்தில்
‘தூப்ளஸித்’ தொண்ணூறு தூள்
கம்மின்ஸின் பேரடிக் கம்மியாய்ப் போனதோ
விம்முதே கொல்கத்தா வீரமாய்- பம்மாது,
யார்வந்து போட்டாலும் ஆறென்ற ரஸ்ஸலும்,
கார்த்திக்கும் தந்தார் களிப்பு
சாகரின் வீச்சுக்குச் சாகாதோ ரிங்கில்லை
ஆகாஜ டேஜாவும் அற்புதம்- நோகாமல்,
‘காட்ச்சுப்’ பிடித்திடும்காட்சிப் பொருளிவன்,
மாட்சிமை மீண்டிடு மா?
சிங்கமது சீறச் சிறப்புகள் சேர்ந்திடும்
தங்கமகன் தோனி தளராதே! எங்கும்,
இடர்பல வந்து இடறினும் வீழாப்
பிடரிகொள் சிங்கமிதைப் பேண்!
நதிநேசன் கணேஷ்
#IPL2021