IPL 21- 16 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:16: RCB vs RR: RCB won
MoM: Devdutt Padikkal

பொடிப்பொடி யாயினர் போக்கிழந்த ஆரார்
படிக்கல் தடுத்துப் படுத்த – முடியாச்,
சதந்தந்த தேவ்தத்தின் சாட்டையடிச் சத்தம்
இதந்தருதே பெங்களூருக் கீங்கு

செய்யுந் தொழிலிலேச் சீராய் முயற்சித்தால்,
மெய்வருத்தக் கோலிதந்து மேம்படுத்தும்-உய்வுறு,
‘ஈசாலே’ கோப்பை இனியெம தேயென்னும்,
ஆசானே ‘வீராட்’ட மாடு

நதிநேசன் கணேஷ்
#IPL2021