IPL 21- 17 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:17: MI vs PBKS: PBKS won
MoM: KL Rahul
‘ராகுல்கா ல’த்தின் ரணகளச் சூழலால்
நோகுது மும்பையும் நொண்டியே- வேகுது,
வெம்மைச் சுழல்வீச்சை வெல்லத் தெரியாது,
எம்மை(M.I) இழக்கும் எடை
மயிலாக மாயங்க் மரமாக ராகுல்
கெயிலாடப் பஞ்சாப் கெலிக்கும் – வெயிலாடும்
சேப்பாக்கக் களத்துச் செருவெல்ல, நின்றாடிக்
கேப்டனும் கண்டான் கிழக்கு
நதிநேசன் கணேஷ்
#IPL2021