IPL 21- 18 வெண்பா’ல் கிரிக்கெட்
Match:18 KKR vs RR: RR won
MoM: Chris Morris

வெண்பா’ல் கிரிக்கெட்

மாரிஸ்ஸின் வீச்சில் மயங்கியக் கொல்கத்தா
யாரினிக் காப்பென ஏங்கிடும்-காரிருள்
சூழ்ந்திடுங் காலத்தும் சோர்வின்றிப் போராடு
வீழ்ந்தும் எழுவதே வீறு

செயல்விரன் டூபே சினங்கொன்ற மில்லர்
மயங்காத சஞ்சு மகிழ்ந்தான்- முயன்றிங்கு
வேலியைத் தாண்டி வெளிவரும் இந்திய
வாலிபர் ராஜஸ்தான் வரம்

நதிநேசன் கணேஷ்
#IPL2021