பெய்யனப் பெய்க மழையே
———————————————+
சொல்லால் நானும் நல்லானே!
‘பெய்யெனச்’ செப்பினேன்
பொய்க்காது பெய்க மழையே!
இப்பார் செய்யும் தப்பைத்தான்
துப்பாது, என்னூரில்
தப்பாதுத் தூவு மழையே!
கூசாது, பசுமை கொன்றதைப்
பேசாது, எங்களையும்
ஏசாது,கொட்டு மழையே!
விரிபசுங் கூட வாயுக்கள்
கரியமி லங்கொட் டினாலும்
மரிக்காதுப் பொழிக மழையே!
எல்நினோ, எல்லை தாண்டினாலுஞ்
செல்லாது, என்னாட்டில்
சில்லெனச் சொரிக மழையே!
நதிநேசன்