ஒவ்வொரு
தோல்வியிலிருந்தும்
எழ வைக்கும்..

ஒவ்வொரு
வெற்றியையும்
தொழ வைக்கும்…

ஒவ்வொரு
அச்சத்தையும்
அழ வைக்கும்…

ஒவ்வொரு
செருக்கினையும்
விழ வைக்கும்…

ஒவ்வொரு
விழைதலுக்கும்
உழ வைக்கும்…

அவர்கள் அன்பு, போதும்…

ஒவ்வொரு
கிழமைக்கும்!