நிறுக்கும் தராசின் மதிப்பீடு

நிறுத்த முடியா தென்னை,

நான் காற்று..

 

மூலம் சிறிதெனச் சொல்லி

மூலையில் முடக்கலாகா தென்னை,

நான் நதி..

 

இரவிற்குள் இறக்கி வைத்தாலும்

இருட்டு நெருங்கா தென்னை..

நான் மதி..

 

எழுத்தினை எரித்திடினும்

எழுந்திடுவேன் மீண்டும் மீண்டும்;

நான் எண்ணம்..

 

வருந்தாது வளைந்திடுவேன்

உடையாத உள்ளங் கொண்டு

நான் மூங்கில்

 

அற்ப வலிகளைப் பொறுத்துச்

சிற்பமாய் சிறந்து நிற்பேன்;

நான் நம்பிக்கை…!