——————–
வாசற் கதவைத் திறந்து வைத்தேன்
விடியல் உள்ளே வந்தது
வாசம் மிகுந்த புதிய தென்றல்
முடியை வருடிச் சென்றது
வீசும் ஒளியும் வெளிச்சப் பாடல்
படித்துக் கொண்டே போனது
பேசும் மலரில் வண்டும் தேனைக்
குடித்துப் பள்ளும் பாடுது
புலரும் பொழுதில் பிறக்கும் பாட்டில்
புதிய எண்ணம் தோணுது
மலரும் நாளின் மலர்ச்சி கண்டு
மதியும் திண்ணம் கொள்ளுது
அலரின் இதழ்கள் அழகாய்ச் சிரிக்க
அதிரும் கதிரும் ஆடுது
பலரின் விழியில் படியும் விடியல்
பதிந்தென் பாட்டா யானது!