விடைகளாகும் தடைகள்

 

கல்லில் முள்ளில் நெளிந்து,

செல்லும் நதியும்  சொல்லும்;

பாறை,…

பாதைத் தடையில்லை

 

நித்தம் இருண்டு ஒளிரும்,

பழைய வானம் பகரும்;

வயது, …

வாழத் தடையில்லை

 

குத்தும் முள்ளைச் சுற்றி

மலரும் நேரம் கூறும்;

வலிகள், …

வளரத் தடையில்லை

 

குக்கூ வென்றே பாடும்,

கானக் குயிலும் கூவும்;

உருவம், …

உயரத் தடையில்லை

 

சிறகால் எல்லை கடக்கும்,

பறவைக் கூட்டம் பகரும்;

பணமும், ….

பயணத் தடையில்லை

 

புழுவாய்ப் பிறந்தும் பறக்கும்,

பட்டாம் பூச்சிப் பாடம்;

மாற்றம், …

மகிழத் தடையில்லை

 

முடியும் என்று முனைந்து,

விடியும் மனதில் விளங்கும்;

தடைகள்,…

விடையே, தவறில்லை…

 

நதிநேசன்