பூரி’ப்பு வேண்டு மன்றோ
பூரணமாக இன்றே
உப்பிய உருவம் தரித்தால்
உப்பு சற்றுக் குறைவாயிருந்தால்
உலைச்சூட்டில் இலையில் விழுந்தால்
உடன் உண்ண உருளை மிதந்தால்
ஊட்டமாய்ச் சாம்பார் சரிந்தால்
உதவிக்குச் சட்னி தெரிந்தால்
உளுந்து வடை உருண்டு புரண்டால்
உன்னதக் காஃபி ஒன்று
உந்தனிடந்தேடி ஓடி வந்தால்
ஒரு வார இறுதி நாளில்
உலகமே ‘பூரி’ப்படையும்!
பூரி’ப்படைந்தேன் நானும்
பூரணமாக இன்றே!
நதிநேசன் கணேஷ்