இதோ முடியுது
மற்றுமொரு வருடம்…
என்ன கிழித்தாய்
என்னைத் தவிர..
நாள்காட்டி கேட்கிறது..
என்ன வளர்த்தாய்
என்னைத் தவிர…
வயிறு கேட்கிறது
என்ன படித்தாய்
என்னைத் தவிர…
வாட்சப் கேட்கிறது
என்ன கழித்தாய்
என்னைத் தவிர…
நேரம் கேட்கிறது
என்ன சேர்த்தாய்
என்னைத் தவிர…
பொருளும் கேட்கிறது
வெறுந்தாளாய்ப் பறக்கிறது..
வேண்டிச் செய்த, போனப்
புத்தாண்டுத் தீர்மானங்கள்…
இதோ இன்னொரு புதுத்தாள்
புது நாள்..புது வருடம்
புதுப்புதுத் தீர்மானங்களுடன்…
கிழிக்கத் தயாராய்
புத்தம் புது
நாள்காட்டி…