புதிய நீ!
————–
உதிக்கின்ற கதிர்
சுழல்கின்ற பூமி
புலர்கின்ற காலை
குளிர்விக்கும் மாலை
குவிகின்ற முகில்
துயில்கின்ற மலை
முகங்காட்டும் மதி
சுரக்கின்ற நதி
நுரைக்கின்ற கடல்
உயிர்விக்கும் காற்று
முளைக்கின்ற விதை
பூச்சூடும் கிளை
துளிர்க்கின்ற இலை
முடிவில்லா அலை
புத்தம் புதிதாய்
இன்றும் பிறக்கும்….
என்று நீ?!!!!
நித்திரை முடிந்து
சித்திரை சிறக்கட்டும்…
புத்தாண்டு நல்வாழ்த்துகள்