என் மனத்தின்
எட்டுத் திசைகளிலும்
எட்ட நின்று
எட்டிப் பார்த்தேன்
ஒவ்வொரு திசையிலும்
ஒவ்வொரு குப்பை..
கிழக்கில் அச்சக் குவியல்
வடகிழக்கே ஆத்திர அடைசல்
மேற்கில் கவலைக் கிடங்கு
தென்மேற்கே கர்வக் கஞ்சல்
வடக்கே பொறாமைத் தொட்டி
வடமேற்கே புகார்கள் பெட்டி
தெற்கே பொய்யின் கூளம்
தென்கிழக்கே சந்தேகக் கூவம்
போக்கினேன் குப்பை எல்லாம்
போகியின் நாளில், என்னுள்
புதியதோர் என்னைப் படைத்தேன்
புவியிலே பிரம்மன் நானே!