நிந்தித்திடு நித்தச் சுமையவை

சிந்தித்திட சித்தந் தெளிவுற

முந்தித்தொழு தொந்திக் கணபதி அருளோடு

 

நெஞ்சத்திடு நஞ்சும் விடுபட

அஞ்சிப்பெறு மச்சப் பிடிவிட

மஞ்சந்தரு மிச்சச் சுகமெனு மிருளோட

 

சுற்றித்திரி வட்டப் புவியது

பற்றுங்கதி ரெட்டுங் கணமிது

முற்றத்திலு முட்டும் பகலவ னொளியோடு

 

தும்பிக்கையை நம்பும் களிரென

எம்பிப்பெறு எண்ணக் கனியது

நம்பிக்கையை யுந்தும் விடியலை துதிபாடு

 

நதிநேசன்

(சந்தம்: 

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன தனதான)