காதல் ஹைக்கூ
——————————–
காதலித்து மணந்த பின்னர்
கண்டு பிடித்தான் நியூட்டன்..
மூன்றாம் விதி!

காதல் பிறந்தது…
உனக்கும் எனக்கும்…
என்ன பெயர் வைப்பது?

நிலவுக் கன்னி உறங்க
வெள்ளை முகில் மெத்தை
வானக் காதலன் பரிசு!

அல்லிக் குளத்தில்
மல்லி வாசம்,
குளித்துவிட்டு போயிருப்பாள்..
அவள்!

நதிநேசன்