கல் நம்பிக்கை
உள்ளம் முடங்கிப் போகும்
பொழுதுகளில், நான்,
கல் உடைக்குந் தொழிலாளியைக்
காண விழைவதுண்டு…
கடுமையாக நூறு முறை
கடப்பாரையால் அடித்தும்,
சற்றுக் கீறல் கூடக் காணாத
அந்தப் பாறை,
அவரின்…
நூற்றியோராவது அடியில்
துண்டிரண்டாய் பிளக்கும்..
அப்போது புரியும்…
அப்பாறையைப் பிளந்தது..
அந்தக் கடைசி அடி அல்ல…
அதற்கு முந்தைய
உழைப்பும்,
விடாது முயலும்,
அந்த நூற்றியோராவது
முனைப்பும்
தான் என…!
நதிநேசன்