Get Across Doing Karma
கடமையைச் செய்து கட
————————–
நித்தமும் ஆசைகள் நெஞ்சினி லோசைகள்
சித்தனா யெப்படிச் சேர்வது? மொத்தமும்,
சிந்தித் தெறித்துச் சிதறும் மனதது
முந்திடச் சொல்வீர் மொழி
அத்தனைத் தேடலும் ஆட்டும் மனதினைப்
பித்தம் பிடித்திடப் பேணினேன்- சத்தமாய்,
ஆழ்கடல் மீதினி லாடுங் கலமென
வாழ்வினை வாட்டும் வலி
துறப்பதால் ஆசை தொலைவது மில்லை
மறப்பதால் கூடும் மடங்கு – பிறப்பும்,
மடமை யெனாது மனிதம் வளர்க்கும்
கடமையைச் செய்து கட
வேண்டும் பொருளெனும், வேட்கை மனிதனை
ஆண்டு கிடக்குது ஆழமாய்-தூண்டிலைப்
போடும் மனதின் பொறியினில் சிக்காது
நாடி நகர்தல் நலம்
நதிநேசன் கணேஷ்
(நேரிசை வெண்பா)
26/05/2021