உளி வலி தாங்கு, சிலையாவாய்
ஒளி, ஒலி தாங்கு, மலையாவாய்
வளி மழை தாங்கு, மரமாவாய்
துளி யிடர் தாங்கு, திடமாவாய்
வயல் வெளி தாங்கு, சோறாவாய்
கயல் கடல் தாங்கு, ஆறாவாய்
புயல் புலம் தாங்கு, வேராவாய்
செயல் திறம் தாங்கு, நேராவாய்
புகழ் பழி தாங்கு, கலையாவாய்
முகத் துதி தாங்கு, நிலையாவாய்
அகம் புறம் தாங்கு, அறமாவாய்
இகம் பரம் தாங்கு, இறையாவாய்
நதிநேசன் கணேஷ்